விளையாட இதுநேரமா முருகா
பல்லவி
விளையாட இதுநேரமா முருகா - என்
வினையாலே படும்பாடுதனைச் சொல்ல வரும்போது
அனுபல்லவி
சலித்தேன் ஜென்மம் எடுத்து களைத்தேன் பொறுத்திருந்து
உளமாற உனைப்பாட உனைநாடி வரும்போது
சரணம்
புறியாத புதிரோ நீ அறியாத கதையோ
பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ
விரித்தோகை மயில்மீது வருவாயென்று எதிர்பார்த்து
வழிமீது விழி வைத்து வழி பார்த்து வரும்போது

No comments:
Post a Comment